பாம்பை கடித்த குழந்தை... சுருண்டு விழுந்து பலியான பாம்பு!

 
snake

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் குழந்தை கடித்து பாம்பு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரில் உள்ள கயா மாவட்டத்தில் உள்ள ஜமுஹர் கிராமத்தில் கடந்த வாரம் தனது வீட்டு மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தது. மாடியில் தவழ்ந்து விளையாடி கொண்டிருந்த ஒரு வயது ஆண் குழந்தை, ஊர்ந்து வந்த 3 அடி பாம்பை பொம்மை என நினைத்து கடித்ததாக கூறப்படுகிறது. குழந்தை பாம்பை மெல்லுவதைப் பார்த்த அவரது தாய், உடனடியாக அதை வாயிலிருந்து எடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.


ஆனால் அந்த பாம்பு உயிரிழந்ததாகவும், குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்றதொரு பீகாரின் ராஜவுலியிலும், உத்தரபிரதேசத்தின் சௌரா கிராமத்திலும் நிகழ்ந்துள்ளது.