“சிறைக்கு சென்றால் 3 வேளை சாப்பாடு கிடைக்கும்”... நடத்துனரை கத்தியால் குத்திய இளைஞர்

 
bengaluru bus conductor asks passenger not to stand on foot

பெங்களூருவில் வேலையில்லாத விரக்தியில் கையில் கத்தியுடன் அரசு பேருந்தில் ஏறி நடத்துனரை கத்தியால் குத்தி ரகளையில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Bus conductor stabbed

பெங்களூரு நகரில் நேற்று மாலை வைட்ஃபீல்டு என்ற பகுதியில் இருந்து நகரின் மையப் பகுதிக்கு செல்லும் பெங்களூரு மாநகரப் பேருந்தில் ஹரிஷ் என்ற நபர் படியில் நின்றவாறு பயணித்து வந்தார். அப்போது படியில் நின்றவரை உள்ளே வரும்படி நடத்துனர் அறிவுறுத்த அதை ஏற்காமல் இளைஞர் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இளைஞருக்கும் நடத்துனருக்கும் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முத்திய நிலையில் ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த இளைஞன் திடீரென தன் பையில் இருந்து ஒரு கட்டையையும் ஒரு கத்தியையும் எடுத்து கத்தியால் நடத்துனரை திடீரென குத்தினார். 


அதேசமயம் கத்தியை வைத்தவாறு பேருந்தில் இருந்த அனைத்து பொது மக்களையும் ஆக்ரோசத்துடன் இளைஞன் மிரட்டிய நிலையில் அனைவரும் பதறி அடித்தவாறு பேருந்தில் இருந்து கீழே இரங்கி ஓட்டம் பிடித்தனர். முன்புறம் பேருந்தில் கதவு திறக்கப்படாத நிலையில் ஓட்டுனரின் இருக்கை அருகே இருந்த கதவை திறந்து பொதுமக்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொதித்து வெளியேறிய காட்சிகளும் பேருந்தில் இருந்த சிசிடிபியில் பதிவாகியுள்ளன. பொதுமக்கள் அனைவரும் கீழே இறங்கி ஓடிய நிலையில் பேருந்தில் இருந்த இளைஞன் உள்ளே இருந்த ஒவ்வொரு ஜன்னல் கண்ணாடியாக அடித்து உடைக்க தொடங்கினான். பேருந்தின் முன்பக்க கண்ணாடியையும் கையில் இருந்த மிகப்பெரிய கல்லைக் கொண்டு வேகமாக தாக்கி உடைக்க தொடங்கினான். இந்த காட்சியை சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். பஸ் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு அந்த இளைஞனை உள்ளே வைத்து பஸ்சின் கதவுகளை மூடிவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 

Moment Bengaluru Bus Conductor Was Stabbed By Passenger Caught On CCTV -  Oneindia News

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடனடியாக இளைஞனை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க துவங்கினர். காயமடைந்த கண்டக்டர் யோகேஷ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், கைது செய்யப்பட்ட ஹரிஷிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பெங்களூருவில் டெலி பெர்பாமன்ஸ் என்ற பிபிஓ நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், அங்கிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தினந்தோறும் வேலை தேடி வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். பல வாரங்களாக உணவுக்கு கஷ்டப்பட்டு வந்த நிலையில் எதாவது ஒரு குற்றத்தை செய்து சிறைக்குச் சென்றால் 3 வேலை உணவு கிடைக்கும் என்று முடிவு செய்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.