சாலையில் நடந்து சென்ற பெண்ணை ஆட்டோவில் கடத்தி பலாத்காரம் செய்து தூக்கி எரிந்த கொடூரம்

 
Auto driver arrested for attempted rape of a Tribal woman in Telangana Asifabad

தெலங்கானா மாநிலத்தில் ஆட்டோவில் சென்ற  பழங்குடியின பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rape


தெலங்கானா மாநிலம் குமரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூரில் இருந்து பழங்குடியின பெண் (ஆதிவாசி பெண்)  ஒருவர் சிர்பூரில் உள்ள  தனது தாயின் கிராமத்திற்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  சோனுபத்தேல்குடாவைச் சேர்ந்த ஷேக் மஸ்தூம் என ஆட்டோ டிரைவர் வழியில் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி கொண்டு  ராகாபூரில் யாரும்  இல்லாத இடத்தில் பாலியியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை எதிர்க்க முயன்றதால் அந்த பெண்னை அடித்ததில் அந்த பெண் சுயநினைவை இழந்தார்.  இதனால் பயத்தில் அவள் இறந்துவிட்டாள் என்று நினைத்து ஷேக் மஸ்தும் விபத்து ஏற்பட்டது போல் பெண்ணை சாலையில் தூக்கி எறிந்துவிட்டு சென்று விட்டார்.

பின்னர் அவ்வழியாக சென்றவர்கள் அந்த பெண்னின் நிலையை பார்த்து  அடிலாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கும்  அழைத்துச் சென்றனர்.  அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக  ஐதராபாத் காந்தி அரசு  மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அங்கு சிகிச்சைக்கு பின் பாதிக்கப்பட்ட பெண் சுயநினைவு அடைந்து உறவினர்களிடமும் போலீசாரிடம்    பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு  தாக்கப்பட்டதாக போலீசாருக்கு கூறினார்.  இதனையடுத்துப் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், சிர்பூர்  காவல் நிலையத்தில் கடந்த 1-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  மறுபுறம், இந்த சம்பவத்தை கண்டித்து ஆதிவாசி சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஜெயினூரில் ஆர்ப்பாட்டம் மற்றும் புதன்கிழமை அந்த பகுதியில்  பந்த் அழைப்பு விடுத்தனர்.

Image shows violence that erupted in Asifabad's Jainoor after attempted rape of tribal woman. (Screengrab)


பழங்குடியின சமூகத்தினர் அழைப்பு விடுத்திருந்த பந்த் முழு அளவில் நடந்தது. ஜெய்னூரில் ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் திரண்டு குற்றவாளியை தூக்கிலிட வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.   பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது.  இதையடுத்து, அவரை உடனடியாக தண்டிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.  அதன்பிறகு இரு சமுகத்தினரும்   பல  கடைகளில் நுழைந்து அடித்து உடைத்து  சாலையில் கொண்டு வந்து தீ வைத்து எரித்தனர்.  மேலும்  பல வாகனங்கள் அடித்து நொறுக்கினர்.  இருதரப்புக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது.  போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த சிறப்பு போலீஸ் படைகள் குவிக்கப்பட்டது. 


இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு சார்பில் நீதி வழங்கப்படும் என அமைச்சர் சீதக்கா உறுதியளித்தார்.  ஐதராபாத்தில் உள்ள காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்னை அமைச்சர் சீதக்கா புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு நடந்த  விவரங்களைப் கேட்டறிந்தார்.  குற்றவாளியை பொலிசார் கைது செய்து, கடுமையாக தண்டிக்கப்படுவார் என்றார். இதுகுறித்து மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் பழங்குடியின பெண் மீதான பலாத்காரம் செய்து தாக்கப்பட்ட செயல்  மனிதாபிமானமற்றது என்று தெரிவித்தார்.  டிஜிபி ஜிதேந்தரிடம் போனில் பேசி  ஜெயினூரில் உள்ள பதற்றமான சூழல் குறித்து கேட்டறிந்தார்.  குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.

Auto driver arrested for attempt to rape, murder tribal woman in Asifabad- Telangana Today
 
இந்த சம்பவத்தை அடுத்து டிஜிபி ஜிதேந்தர் மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி  மகேஷ் பகவத் ஆகியோர் ஜெய்னூரில் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஜெய்னூரில் அமைதியும், பாதுகாப்பும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்ட நிர்வாகம் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.  சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் இணையதள சேவை முடக்கப்பட்டது.  போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.