அல்லு அர்ஜுனின் வீட்டின் மீது தாக்குதல்

 
அல்லு அர்ஜூன்

ஹைதராபாத்தில் உள்ள அல்லு அர்ஜுனின் வீட்டின் மீது இளைஞர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

allu arjun

‘புஷ்பா 2’ திரைப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்ட போது, ஹைதராபத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் திரையரங்கு உரிமையாளர், மேலாளர் உள்பட 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் அல்லு அர்ஜூனும் கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இருப்பினும் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி தெலங்கானா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  

புஷ்பா 2 பட வெளியீட்டின் போது தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்ததற்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் என தெலங்கான முதல்வர் குற்றம்சாட்டிய நிலையில், ஹைதராபாத்தில் உள்ள அல்லு அர்ஜுனின் வீட்டின் மீது இளைஞர்கள் சிலர் கற்கள் மற்றும் தக்காளிகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்தனர் போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் அமைப்பினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரசிகையின் குடும்பத்திடம் அல்லு அர்ஜூன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கைதானவர்கள் முழக்கமிட்டனர்.