“பசு காவலர்களுக்கு பசுவுக்கும் எருமைக்கும் வித்தியாசம் தெரிவதில்லை… ஆனால் ” – கிழித்தெடுத்த ஒவைசி!

 

“பசு காவலர்களுக்கு பசுவுக்கும் எருமைக்கும் வித்தியாசம் தெரிவதில்லை… ஆனால் ” – கிழித்தெடுத்த ஒவைசி!

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் குவாஜா இப்திகார் அகமது எழுதிய தி மீட்டிங் ஆப் மைன்ட்ஸ் எனும் நூல் வெளியிட்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் நேற்று பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் மரபணுவும் ஒன்றுதான். இந்தியாவில் இஸ்லாமியர்கள் இருக்கக் கூடாது என்று ஒருவர் வெறுப்புடன் கூறினால் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது.

“பசு காவலர்களுக்கு பசுவுக்கும் எருமைக்கும் வித்தியாசம் தெரிவதில்லை… ஆனால் ” – கிழித்தெடுத்த ஒவைசி!

சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமைகள் நடக்கும்போது பெரும்பான்மை மக்களிடம் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் குரல் எழ வேண்டும். பசு புனிதமான விலங்கு. ஆனால், சிலர் பசு காவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் இது இந்துத்துவாவிற்கு எதிரானது. சிலர் மீது பொய்யான வழக்குகளும் கூட தொடரப்பட்டுள்ளன. இந்தியாவில் இஸ்லாம் மதம் ஆபத்தில் இருப்பதாக முஸ்லிம்கள் அச்சப்பட வேண்டாம். மக்களை ஒற்றுமைப்படுத்தி, தேசத்தைக் கட்டமைக்கவே நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறியிருந்தார்.

“பசு காவலர்களுக்கு பசுவுக்கும் எருமைக்கும் வித்தியாசம் தெரிவதில்லை… ஆனால் ” – கிழித்தெடுத்த ஒவைசி!

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ இதிகாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சி தலைவர் அசாசுதீன் ஒவைசி ட்வீட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், ” ‘ஒருசிலர் பசு காவலர்கள் என்ற பெயரில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இது இந்துத்துவாவிற்கு எதிரானது’ என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறுகிறார்.

இந்தக் கொடூரர்களுக்கு பசுவுக்கும், எருமைக்குமே வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் ஜூனைத், அக்லக், பெஹ்லு, அக்பர், அலிமுதீன் என்ற பெயர் வைத்திருக்கும் இஸ்லாமியர்களை அடித்துக் கொல்ல வேண்டும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. கலவரம் செய்வது, கொலை செய்வது போன்றவை தான் கோட்ஸேவின் இந்துத்துவா சிந்தனை. இதன் விளைவாக தான் முஸ்லிம்கள் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்களும் நடைபெறுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.