தொழிற்சாலையில் 2 பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து

 
fire fire

திருப்பதி மாவட்டம் பென்னேப்பள்ளியில் உள்ள ஸ்டீல் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.



ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் பெள்ளக்கூர் மண்டலம் உள்ள பென்னேபள்ளியில் எம்.எஸ்.அகர்வால் ஸ்டீல் தொழிற்சாலை உள்ளது. இங்கு புதன்கிழமை நள்ளிரவு பலத்த சத்தத்துடன் இரண்டு பாய்லர்கள் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் நாயுடுபேட்டை மற்றும் நெல்லூர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 6 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். ஸ்டீல் தொழிற்சாலையில் இரவுப் பணிகளில் 50 முதல் 70  தொழிலாளர்கள் பணிபுரிவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். அங்குள்ள  நிர்வாகம் விவரம் வெளியே தெரியாத வகையில் தொழிற்சாலை நிர்வாகம் ரகசியம் காத்து வருவதால்  குழப்பம் ஏற்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு நடவடிக்கை கடைபிடிக்கவில்லை என தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டு உள்ளனர்.