பணக்கார முதலமைச்சர் பட்டியல்- ஆந்திர முதல்வர் முதலிடம்!
பணக்கார முதலமைச்சர் பட்டியலில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முதலிடத்தில் உள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மொத்தம் ரூ.930 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. இந்தியாவின் தனிநபர் நிகர தேசிய வருமானம் (NNI) 2023-2024 இல் தோராயமாக ரூ. 1,85,854 ஆக இருந்தது, ஒரு முதல்வரின் சராசரி சுய வருமானம் ரூ. 13,64,310 ஆகும், இது இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானத்தை விட 7.3 மடங்கு அதிகம் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) தெரிவித்துள்ளது.
அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு மொத்த சொத்து மதிப்பு ரூ.332 கோடியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். கர்நாடகா முதல்வர் சித்தராமையா ரூ.51 கோடிக்கு மேல் சொத்துகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். மேலும் சித்தராமையாவுக்கு ₹ 23 கோடியும், நாயுடு ₹ 10 கோடிக்கும் மேல் கடன்கள் உள்ளதாக அறிக்கை கூறுகிறது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா
15 லட்சம் சொத்துமதிப்புடன் கடைசி இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ.8 கோடி சொத்து மதிப்புடன் 14வது இடத்தில் உள்ளார்