அதிர்ச்சி சம்பவம்! பள்ளி மாணவிகளின் முடியை வெட்டிய ஹாஸ்டல் வார்டன்...
ஆந்திராவில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளின் முடியை விடுதி வார்டன் வெட்டிய சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கேஜிபிவி மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள், அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளனர். இந்த நிலையில், அந்த விடுதியில் தங்கி கல்வி பயிலும் சில மாணவிகள் பள்ளிக்கு தாமதமாக சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல் விடுதியின் வார்டன் பிரசன்னா குமாரிக்கு சென்ற நிலையில், அந்த மாணவிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கியுள்ளார். அதாவது பள்ளிக்கு எந்தெந்த மாணவிகள் விடுதியில் இருந்து தாமதமாக சென்றார்களோ அவர்களது தலை முடியை கத்தரிக்கோலால் வெட்டியுள்ளார்.
இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை டுக்கப்பட்டுள்ளது. மாணவிகளின் தலை முடியை வார்டன் வெட்டிய சம்பவம் வைரலான நிலையில், இது தொடர்பான புகாரில் விடுதி வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கு தாமதமாக வந்த காரணத்திற்காக பள்ளி மாணவிகளின் முடியை விடுதி வார்டன் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.