ஏற்கனவே 4 திருமணம்.. மனைவி உயிரிழப்பு.. கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை குற்றவாளியின் பகீர் பின்னணி..

 
ஏற்கனவே 4 திருமணம்.. மனைவி உயிரிழப்பு.. கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை குற்றவாளியின் பகீர் பின்னணி..  

கொல்கத்தாவில்  பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுகைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட நபர் ஏற்கனவே 4 முறை திருமணமானவர் என தெரியவந்துள்ளது.. 

மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்துவந்த பெண் பயிற்சி மருத்துவர், கல்லூரி கருத்தரங்கு அறையில் உயிரிழந்து கிடந்தார். அரைநிர்வாண கோலத்தில் கடந்த 9ம் தேதி அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.  போலீஸார் நடத்திய விசாரணையில் , அதற்கு முந்தைய நாள் (ஆக.8)இரவு பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்  சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

 பாலியல் தொல்லை

கைதாகியுள்ள சஞ்சய் ராய் ஏற்கனவே 4 முறை திருமணமானவ என தெரியவந்திருக்கிறது. இதில்  முதல் 3 மனைவிகள் அவரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் பிரிந்து  சென்றுவிட்டதும், கடந்த ஆண்டு 4வது மனைவியும் உயிரிழந்துவிட்டார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.  இரவில் வீட்டுக்கு மதுபோதையுடனே அடிக்கடி வருவார் என அக்கம்பக்கத்தினரும், ஏற்கனவே திருமணமானதை மறைத்து தனது மகளை திருமணம் செய்து கொண்டதாக அவரது மாமியாரும் குற்றம் சாட்டியிருக்கின்றனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை சஞ்சய் ராயின் தாயார் மறுத்துள்ளார்.  போலீஸாரின் அழுத்தம் காரணமாக இந்தக்கொலையை குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.  

இதனிடையே மாணவியின் 4 பக்க பிரேத பரிசோதனை மருத்துவ அறிக்கையில் அவரது அந்தரங்க உறுப்புகள், வாய் உள்ளிட்ட இடங்களில் ரத்தம் வடிந்திருப்பதாகவும், உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டும், சமரசமற்ற விசாரணை நடத்தக்கோரியும் மாணவர்களும் , மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.