“யாரையும் தரக்குறைவாக பேசாதீங்க”- ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள்
பொதுவெளியில் யாரையும் தரக்குறைவாக பேசாதீர்கள் என ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அல்லு அர்ஜுன் கால்களை இழந்தாரா, கண்களை இழந்தாரா, அல்லது கிட்னியை தான் இழந்தாரா? அல்லு அர்ஜுனின் இல்லத்துக்கு திரை பிரபலங்கள் விரைந்து சென்று அவரை பார்க்க வேண்டிய அவசியம் என்ன காயமடைந்த சிறுவனைப் பற்றி யாராவது அக்கறை காட்டினார்களா? மருத்துவமனைக்குச் சென்று தான் பார்த்தார்களா? என தெலங்கானா சட்டமன்றத்தில் ரேவந்த் ரெட்டி உரையாற்றினார்.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள நடிகர் அல்லு அர்ஜூன், “திரையரங்கில் பெண் உயிரிழந்தது எதிர்பாராமல் நடந்த விபத்து. சமூக வலைதளங்களிலோ, பொது வெளியிலோ யாரையும் தரக்குறைவாகவும், தவறான வார்த்தைகளை பயன்படுத்தியும் பேசாதீர்கள். எனது ரசிகர்கள் தங்களுடைய உணர்வுகளை பொறுப்புடன் வெளிப்படுத்த வேண்டும். என் கேரக்டரை கொலை செய்து விட்டார்கள்... உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை கண்டிப்பாக கைவிட மாட்டேன்” என்றார்.