சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி!!

 
sabari


கேரள மாநிலத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன்  கோவிலில் வருகின்ற டிசம்பர் 26ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது.  அன்று மாலை நடை சாத்தப்படும் நிலையில் மீண்டும் 30ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது.  வருகிற ஜனவரி 14-ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளதால் 61நாட்கள் தரிசனத்துக்காக இணையதள முன்பதிவு ஏற்கனவே தொடங்கி முடிந்துவிட்டது.

sabari

அந்தவகையில் நேற்று சபரிமலை நடை திறக்கப்பட்டது .இதன் காரணமாக இன்றில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று தரிசனம் செய்ய 8000 பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர்.  தினமும் 30,000 பேர் வரை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், மழையால் பக்தர்கள் கோயிலுக்கு வரவில்லை. 

ttn

கோயிலுக்கு வரும் பக்தர்கள் இரண்டு தவணை கொரோனா  தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வர வேண்டும். இந்த முறை பம்பையில் குளிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்,  சன்னிதானம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பக்தர்கள் தங்கிச் செல்ல அனுமதி இல்லை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.  பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல் வரையே அனுமதிக்கப்படும் என்று கேரள அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.