2 இந்தியாவிலிருந்து வருகிறேன் என்று இழிவாக பேசிய காமெடியன்... காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பா.ஜ.க. தலைவர்

 
வீர் தாஸ்

அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் 2 இந்தியாவிலிருந்து வருகிறேன் என்று இழிவாக பேசிய காமெடியன் வீர் தாஸை கைது செய்யக்கொரி டெல்லி காவல்துறையில் பா.ஜ.க. புகார் கொடுத்துள்ளது.

பிரபல நடிகரும், காமெடியனுமான வீர் தாஸ் தற்போது அமெரிக்காவில் உள்ளார். அந்நாட்டின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஜான்  எப் கென்னடி சென்டரில் நடந்த தனது சமீபத்திய நிகழ்ச்சியின் ஒரு பகுதியின் வீடியோ  டிவிட்டரில் பதிவேற்றம் செய்து இருந்தார். அந்த வீடியோவில், நான் இரண்டு இந்தியாவிலிருந்து வருகிறேன். அங்கு (இந்தியா) நாங்கள் பகலில் பெண்களை வணங்குகிறோம், இரவில் அவர்களை கும்பல் கற்பழிக்கும் என்று மிகவும் இழிவான வகையில் பேசியிருந்தார். இது நம் நாட்டில் மிகவும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதித்யா ஜா (வலது)

காமெடியன் வீர் தாஸின் பேச்சுக்கு அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லி பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் ஆதித்யா ஜா,  வெளிநாட்டு மண்ணில் நாட்டை இழிவுபபடுத்தியதாக வீர் தாஸூக்கு எதிராக டெல்லி திலக் மார்க்  காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் ஆதித்யா ஜா தான் பேசிய வீடியோ ஒன்றை டிவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

வீர் தாஸ்

அந்த வீடியோவில் ஆதித்யா ஜா, வேறு நாட்டில் நம் தேசத்தை யாரும் அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள மாட்டேன். வீர் தாஸை கைது செய்ய போராடுவேன். நான் இந்த போராட்டத்தை ஒரு தீர்க்கமான முடிவுக்கு கொண்டு செல்வேன். வீர் தாஸ் கைது செய்யப்பட வேண்டும். அதனால் தேசத்தை யாரும் இழிவுப்படுத்த முடியாது. எனது காரணத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.