கள்ளக்காதலனை பழிவாங்க குழந்தையை திருடிய பெண்!

 
kidnap

கேரள அரசு மருத்துவமனையில் மருத்துவர் வேடத்தில் வந்து, பிறந்த குழந்தையை கடத்திய பெண், இரண்டு மணிநேரத்தில் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தையை மருத்துவர் வேடமணிந்து வந்த பெண் ஒருவர் கடத்திச் சென்றுவிட்டதாக குழந்தையை பறிகொடுத்த இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி என்பவர் கோட்டையம் காந்தி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், குழந்தையுடன் வாடகை காரில் தப்பிச் செல்ல முயன்ற பெண்ணை கையும் களவுமாக பிடித்தனர். மருத்துவமனையிலிருந்து திருடிய குழந்தையை மீட்டு மீண்டும் தாய் அஸ்வினி இடம் ஒப்படைத்து விசாரணை செய்ததில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

குழந்தையை திருடியவர் பெயர் நீது ராஜ் (வயது 33). கோட்டை மாவட்டம் திருவல்ல பகுதியைச் சேர்ந்த இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும், டிக் டாக் மூலம் இப்ராஹிம் என்ற நபருக்கு பழக்கம் ஏற்பட்டது.  இதனையடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு இப்ராஹிடம் நீதி, கேட்டுள்ளார். ஆனால் இப்ராஹிமுக்கு இதில் விருப்பமில்லை. மேலும் தனக்கும் வேறொரு பெண்ணுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை தடுத்து நிறுத்த எண்ணிய நீது, உன் குழந்தை தன் வயிற்றில் வளர்ந்தது. தற்போது குழந்தை பிறந்துள்ளது. எனவே வேறு திருமணம் செய்யாமல் என்னை தான் திருமணம் செய்ய வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். கள்ளக்காதலனுக்கு காட்டுவதற்காக கேரள அரசு மருத்துவமனையிலிருந்து குழந்தையை திருடி நீது நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து நீது ராஜு வை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.