பாஜக அலுவலகம் முன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பாஜக தொண்டரால் பரபரப்பு

 
suicide

தெலங்கானா பாஜக அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பாஜக தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது.     

టికెట్ రాలేదని పురుగుల మందు తాగి కాంగ్రెస్ నేత ఆత్మహత్యాయత్నం - iDream Post

தமிழகம், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் கவர்னர் வித்யாசாகர் ராவின் மகன் விகாஸ் ராவ் வெமுலவாடா தொகுதியில் போட்டியிட பாஜகவில் வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்காமல்  துலா உமாவுக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால் ஐதராபாத் நாம்பள்ளியில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் விகாஸ் ராவ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவரது ஆதரவாளர்களில் ஒருவரான மெடிப்பள்ளி மண்டலத்தை சேர்ந்த பாஜக  தொண்டர் ஒருவர் உடலில்  பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

உடனடியாக உடனிருந்த சக பாஜக நிர்வாகிகள்,  போலீசார் அவரை தடுத்து மீட்டு தண்ணீர் ஊற்றி அழைத்து சென்றனர். பிரதமர் மோடி நேற்று ஹைதராபாத்தில் பி.சி. சுயமரியாதை கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் பாஜக அலுவலகத்தில் ஒருவர் தீ குளிக்க முயன்ற சம்பவம பரபரப்பை ஏற்படுத்தியது.