கணவரின் அலுவலகத்துக்கு சென்று மனைவி திட்டினால், விவாகரத்து பெறலாம்- சத்தீஸ்கர் ஐகோர்ட்

 
கணவன் மனைவி

கணவன்-மனைவி இடையே உள்ள பிரச்சனையால் மனைவி, கணவன் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு சென்று தகாத முறையில் நடந்து கொண்டால் ஒரு ஆணின் மதிப்பும் மரியாதையும் குறைய தான் செய்யும் என கூறி விவாகரத்து வழங்கியுள்ளது சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்றம். 

மருத்துவ அதிகாரிகள் நியமனத்திற்கு எதிரான மனு: நிராகரித்தது சத்தீஸ்கர்  உயர்நீதிமன்றம்- Dinamani

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சுரேந்திர பட்டேல் என்பவருக்கும் நளினி மிஸ்ரா என்பவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.  அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. பல வருடங்களுக்கு பிறகு கணவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் குடும்பநல நீதிமன்றத்தில் விவகாரத்து கோரி மனு தாக்கல் செய்து உள்ளார். அதன் வழக்கு விசாரணையின் போது, கணவர் தரப்பில், தன்னுடைய மனைவி திருமணமாகி குழந்தை பிறந்த பின்னர் குழந்தையை கவனித்து கொள்வது இல்லை! எதற்கு எடுத்தாலுக் சந்தேகம், சண்டை என வாழ்க்கை உள்ளது. அவர் ஒரு சுயமாக தொழில் செய்கிறார், அதற்காக நான் சம்பாதிக்கும் ஊதியத்தையும் அவரே பயன்படுத்தி கொள்கிறார். என்னுடைய அனுமதியின்றி 5 கார்கள் கடனில் வாங்கியுள்ளார்! இவை மட்டுமல்ல நான் வேலை செய்யும் அலுவலகத்திற்கு அவ்வப்போது வந்து என்னிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்கிறார், சக பெண் ஊழியர்களுடன் தொடர்பில் இருப்பதாக சேர்த்து பேசுகிறார் என குற்றம்சாட்டியுள்ளார். 

சுவாரசியமாக அந்த பெண்ணின் சகோதரரி ஒருவரும் பாதிக்கப்பட்ட ஆணுக்கு ஆதரவாக வாக்குமூலம் அளிக்க இதில் பெண் தரப்பில் குற்றம் நிரூபிக்க பட்டதால் இருவருக்கும் குடும்பநல நீதிமன்றம் விவகாரத்து வழங்கியுள்ளது. ஆனால், கணவர் செய்த கொடுமைகளை என்னிடம் கேட்காமல் இத்தகைய உத்தரவை குடும்பநல நீதிமன்றம் வழங்கியுள்ளது என கூறி அப்பெண் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்த போது, கணவர் தரப்பில்  முன்பு குடும்பநல நீதிமன்றத்தில் கூறியதை உயர்நீதிமன்றத்திலும் கூறினர். குறிப்பாக அலுவலகத்தில் சக பணியாளர்களுக்கு மத்தியில் அசிங்க படுத்துவது, தாய் தந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை, வீட்டிற்கு உறவினர்கள் அவர்களுடன் சேர்த்து வைத்து தகாத முறையில் பேசுவது என பலவேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதுபோல் பெண் தரப்பில், நான் குழந்தை மற்றும் கணவருடன் இணைந்து வாழ விரும்புகிறேன் ஆனால் ஏதோ காரணத்திற்காக என்னை என் கணவர் விவாகரத்து செய்கிறார் என கூறப்பட்டது. 

இரு தரப்பும் வாதங்களை கேட்ட நீதிபதி, ஒரு ஆண் வேலை செய்யும் இடத்திற்கு ஆணின் மனைவி சென்று தகாத முறையில் பேசுவது,நடந்து கொள்வது எல்லாம் அந்த ஆணின் மீதான மதிப்பும் மரியாதையும் சக ஊழியர்களிடம் குறைய செய்யும்! அதேபோல், அந்த ஆணின் கெரவும் குறைய செய்யும்! இவை மட்டுமல்ல ஆணின் தாய் தந்தையை கொடுமை படுத்துவது எல்லாம் ஏற்க முடியாத ஒன்று! என கூறி குடும்பநல நீதிமன்றம் கொடுத்த விவாகரத்து தீர்பை செல்லும் என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்பலித்துள்ளது.