மோடி பிரதமரான பிறகுதான் திரிபுரா மாற்றத்தை கண்டுள்ளது.. முதல்வர் மாணிக் சாஹா

 
மாணிக் சாஹா

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து நரேந்திர மோடி நாட்டின் பிரதமரான பிறகுதான் இந்த பகுதி இந்த மாற்றத்தை கண்டுள்ளது என்று திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்தார்.

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் வடகிழக்கு மாநிலங்களின் டி.ஜி.க்கள்,ஐ.ஜி.க்கள் மற்றும் சி.பி.ஓ.க்களின் 27வது மாநாடு நடைபெற்றது. இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட  திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா உரையாற்றுகையில் கூறியதாவது: குற்றங்களை சமாளிக்க ஜீரோ சகிப்பின்மை கொள்கையை பா.ஜ.க. அரசு ஏற்றுக் கொண்டது. இது முழு வடகிழக்கு பிராந்தியத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை மேம்படுத்த உதவியது. 

பா.ஜ.க.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து நரேந்திர மோடி நாட்டின் பிரதமரான பிறகுதான் இந்த பகுதி இந்த மாற்றத்தை கண்டுள்ளது. வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள மாநிலங்கள் மிகப்பெரிய வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை கண்டுள்ளது. மோடி அரசின் முயற்சியால் மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுள்ளன. 

மோடி

சாதி, சமூகம் மற்றும் அரசியல் ஈடுபாடு இல்லாமல் எல்லா இடங்களிலும் அமைதி மற்றும் ஊழலுக்கு எதிரான கொள்கைக்கான பா.ஜ.க. அரசின் உத்திகளை செயல்படுத்த அனைத்து மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.