திருமலை: அங்கப்பிரதட்சண டோக்கன் இன்று வெளியீடு

 
t

திருப்பதி  ஏழுமலையானே தரிசிக்க அங்கப்பிரதட்சண டோக்கன் இன்று வெளியிடப்படுகிறது.  இன்று காலை 10 மணி அளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது . பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது.

tt

 இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அங்கப்பிரதட்சண டோக்கன் இன்று காலை 10 மணி அளவில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.   பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு ஆன்லைனில் அங்கப்பிரதட்சண டோக்கன் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.