கிளி காணவில்லை! எங்களால் வலியைத் தாங்க முடியவில்லை! கண்டுபிடித்து தந்தால் ரூ.50 ஆயிரம் சன்மானம்

 
ki

செல்லப் பிராணிகளை வளர்ப்போர் தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணி காணாமல் போய்விட்டால் ஊர் முழுவதும் நகரம் முழுவதும் போஸ்டர் அடித்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்து கண்டுபிடித்து தருபவருக்கு ஆயிரக்கணக்கில் சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை அவ்வப்போது பார்க்க நேரிடும்.  பெரும்பாலும் தாங்கள் வளர்க்கும் நாய்கள் காணவில்லை என்று தான் விளம்பரம் செய்திருப்பார்கள். 

 இப்படிப்பட்ட அறிவிப்புகள் அதிகமாக கண்ணில் படும்.   ஆனால் தான் வளர்த்த கிளி காணவில்லை என்று ஒரு பெண்  பேனர் வைத்திருக்கிறார். அந்த கிளியை கண்டுபிடித்து தருபவருக்கு 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் விளம்பரப்படுத்தி இருக்கிறார்.

kii

 கர்நாடக மாநிலத்தில் தும்கூர் மாவட்டம் ஜெய் நகர்.   இப்பகுதியில் வசித்து வருபவர் ரவி.  இவர் விலங்கு மற்றும் பறவை இன ஆர்வலர்.   இவர் மட்டும் அல்லாது அவரது குடும்பத்தினரும் விலங்குகள், பறவைகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக உள்ளார்கள்.   இந்த குடும்பத்தினர் இரண்டு ஆப்பிரிக்க சாம்பல் நிற அரிய வகை கிளிகளை செல்லமாக வளர்த்து வந்திருக்கிறார்கள்.   அந்த கிளிகளும் இவர்கள் குடும்பத்தினருடன் பாசமாக வளர்ந்து வந்திருக்கிறது.

 இந்த நிலையில் கடந்த ஜூலை 16ஆம் தேதி அன்று இரண்டு கிளிகளில் ஒன்று காணாமல் போய் இருக்கிறது.  இதனால் குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சி அடைந்து கவலையில் உள்ளனர்.   பல இடங்களில் தேடியும் கிளி கிடைக்கவில்லை.  இதை அடுத்து காணாமல் போன அந்த கிளியை கண்டுபிடித்து கொடுத்தால் 50 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அந்த கிளியின் போட்டோவுடன் பேனர் வைத்திருக்கிறார்.

 மொட்டை மாடியில், பால்கனியில், மரங்களின் கிளைகளில் எங்கேனும் இந்த கிளியை பார்த்தால் தகவல் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.  எங்களால் அந்த கிளியை பிரிந்த வலியை தாங்க முடியவில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.  ஆண்டுதோறும் இந்த இரண்டு கிளைகளின் பிறந்தநாளை வெளி விமர்சையாக கொண்டாடி வந்திருக்கிறார்கள்.  தற்போது ஒரு கிளி இல்லாததால் இந்த குடும்பத்தினர் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.