நடுவானில் குலுங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானத்தால் பரபரப்பு

 
spicejet

மேற்குவங்கம் மாநிலத்தில் ஸ்பைஸ்ஜெட் விமான விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

spicejet news: SpiceJet's Mumbai-Durgapur flight faces massive turbulence  during descent; 40 passengers injured - The Economic Times Video | ET Now

நேற்று மாலை மும்பையில் இருந்து மேற்குவங்கம் துர்காப்பூர் வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறங்கும் போது தடுமாறியது. இதில் 11 பயணிகள் படுகாயமும், 40 பயணிகள் காயமடைந்தனர்.  உடனடியாக விமான நிலையத்தில் மருத்துவ குழு வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் வானிலையில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக விமானம் தரையிறங்கும் போது தடு மாற்றம் அடைந்ததாக விமானிகள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் நேற்று நடந்த விபத்து தொடர்பாக உண்மை நிலையை அறிவதற்காக விரிவான விசாரணைக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா உத்தரவிட்டுள்ளார். மேலும் விமான விபத்து தொடர்பாக இந்திய விமான போக்குவரத்து ஆணையம் சார்பில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அதிக கவனத்துடன் இந்த விவகாரம் கையாளப்பட்ட விரைவில் விபத்திற்கான காரணம் உள்ளிட்டவை வெளியிடப்படும் எனவும் விமான போக்குவரத்து அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.