சோனியா காந்தியிடம் 3 மணி நேரம் விசாரணை

 
sonia gandhi

நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியிடம் மூன்று மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், இன்றைய விசாரணை நிறைவடைந்தது.  

மறைந்த முன்னாள் பிரதமர் நேரு நிறுவியது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. இந்த பத்திரிக்கையின் பங்குகளை ,   சோனியாவும், ராகுலும் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு  பங்குதாரர்களின் ஒப்புதலை  பெறாமல் மாற்றப்பட்டதாக புகார் எழுந்து. இதனையடுத்து  சோனிய மற்றும் ராகுல் காந்தி மீது  பாஜ தலைவர் சுப்பிரமணிய சுவாமி,   டெல்லி  உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை தற்போது  அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.  ராகுல் காந்தி 5 நாட்கள் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினார். அவரிடம் சுமார் 50 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.  

sonia gandhi

இதனிடையே ஜூன் 8-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்த நிலையில், அவருக்கு திடீரென கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரால் ஆஜராக முடியவில்லை. இதன் காரணமாக அவர் தனக்கு அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, கொரோனா மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக சோனியா காந்திக்கு 4 வார காலத்துக்கு அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் முடிவடைந்ததை தொடர்ந்து ஜூலை 21ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. 

இதனை தொடர்ந்து சோனியா காந்தி இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆனார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மூன்று மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்றைய விசாரணை நிறைவடைந்துள்ளது. இதனிடையே சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.