ராஜபாதையை கடமை பாதை என்று மாற்றினால், அனைத்து ராஜ்பவன்களும் கடமை பவன்களாக மாற வேண்டாமா?.. சசி தரூர்

 
சசி தரூரை சிக்கலில் சிக்க வைத்த 30 வருஷத்துக்கு முன் எழுதிய புத்தகம்! கைது வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்

ராஜபாதையின் பெயரை கடமை பாதை என்று மாற்றினால், அனைத்து ராஜ்பவன்களும் கடமை பவன்களாக மாற வேண்டாமா?  என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கிண்டல் செய்துள்ளார்.

டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ராஜபாதையின் பெயர் கடமை பாதை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு கடமை பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், இந்த நடவடிக்கை அதிகாரத்தின் அடையாளமாக இருந்த முந்தைய ராஜபாதையில் இருந்து, பொது உடைமை மற்றும் அதிகாரமளித்துலுக்கு ஒரு எடுத்தக்காட்டாக இருக்கும் கடமை பாதைக்கு மாறுவதை குறிக்கிறது. 

கடமை பாதை

அடிமைத்தனத்தின் சின்னமான ராஜபாதை இன்று முதல் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது, என்றென்றும் அழிக்கப்பட்டுள்ளது. இன்று கடமை பாதை வடிவத்தில் ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்த சுதந்திர அமிர்த காலத்தில் அடிமைத்தனத்தின் மற்றொரு அடையாளத்திலிருந்து விடுதலை பெற்றதற்காக அனைத்து நாட்டு மக்களுக்கும் நான் வாழ்த்து தெரிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.

மோடி

கடமை பாதை குறித்த பிரதமர் மோடியின் பேச்சை சசி தரூர் கிண்டல் செய்துள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் தனது டிவிட்டர் பக்கத்தில், ராஜபாதையின் பெயரை கடமை பாதை என்று மாற்றினால், அனைத்து ராஜ்பவன்களும் கடமை பவன்களாக மாற வேண்டாமா? ஏன் அங்கு நிறுத்த வேண்டும்? ராஜஸ்தானையும் கடமையஸ்தான் என்று மறுபெயரிடலாமா? என கிண்டலாக பதிவு செய்து இருந்தார்.