நைட் கிளப்பில் நடனமாடிய ராகுல் காந்தி ? - வைரலாகி வரும் வீடியோ

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி நேபாள நாட்டிலுள்ள நைட் கிளப்பில் நடனமாடியது போன்ற வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நைட் கிளப் ஒன்றில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி நிற்பதும் அவரை சுற்றியுள்ளவர்கள் மது அருந்துவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. அவருக்கு அருகில் சீனா அல்லது வடகிழக்கு மாநில தோற்றம் கொண்ட பெண் ஒருவர் நடனம் ஆடுவது பதிவாகி உள்ளது. இந்த நிலையில் அந்த பெண் நேபாளத்திற்கான சீன தூதர் என்றும், அவருடன் சேர்ந்து ராகுல் காந்தி நடனம் ஆடிக்கொண்டு இருக்கிறார் என்றும் பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாஜக மூத்த தலைவர்கள் அமித் மாள்வியா உள்ளிட்டோர் இந்த வீடியோவை பகிர்ந்து ராகுல் காந்தியை விமர்சனம் செய்துள்ளனர். பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தை காங்கிரஸ் கிண்டலடிக்கிறது. ஆனால் இப்போது அதே காங்கிரசின் ராகுல் நேபாளத்தில் கிளப்பில் ஆடிக்கொண்டு இருக்கிறார் என்று அமித் மாள்வியா விமர்சித்துள்ளார்.
Rahul Gandhi was at a nightclub when Mumbai was under seize. He is at a nightclub at a time when his party is exploding. He is consistent.
— Amit Malviya (@amitmalviya) May 3, 2022
Interestingly, soon after the Congress refused to outsource their presidency, hit jobs have begun on their Prime Ministerial candidate... pic.twitter.com/dW9t07YkzC
டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் சி.டி.ரவி, ராகுல் சீன பெண்ணுடன் இருப்பது போல் தெரிகிறது எனவும், இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் சேர்ந்து ஏதாவது பெரிய திட்டம் தீட்டுகிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். ஏன் அவரது வம்சம் பெரும்பாலும் சீனர்களுடன் உள்ளது? இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் சேர்ந்து ஏதாவது பெரிய திட்டம் தீட்டுகிறாரா?' என கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே ராகுல் காந்தியின் பயணம் குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது நேபாளி தோழியும், பத்திரிகையாளருமான சும்னிமா உடாஸ் என்ற பெண்ணின் திருமணத்திற்கு சென்றுள்ளார். அந்த திருமண விழாவில் ராகுல் காந்தி நிற்கும் வீடியோதான் இப்படி வைரலாகி வருகிறது என்றும், ராகுல் காந்தி புகழை கெடுக்க வேண்டும் என்று தவறாக வீடியோவை பரப்புகிறார்கள் என தெரிவித்துள்ளது.