பஞ்சாபில் புதிய திருப்பம்.. சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்ற கவர்னர்

 
பன்வாரிலால் புரோஹித்

பஞ்சாப் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட பிறப்பித்த உத்தரவை அம்மாநில கவர்னர் பன்வாரிலால் புரோஹித் திரும்ப பெற்றார்.

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பஞ்சாபில் அரசை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சிப்பதாக ஆளும் கட்சியான  ஆம் ஆத்மி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. மேலும், சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் கூட்டப்படும் என்று முதல்வர் பகவந்த் மான் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 

பா.ஜ.க.

முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் அரசு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடரை கூட்டி நம்பிக்கை தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டது. இதற்காக சிறப்பு கூட்டத்தொடர் நடத்த அம்மாநில கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திடம் பஞ்சாப் கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து பஞ்சாப் மாநிலத்தின் சட்டபபேரவையின் சிறப்பு கூட்டத்தை வியாழக்கிழமையன்று (இன்று) கூட்ட உத்தரவு பிறப்பித்தார். 

பகவந்த் மான்

இந்நிலையில், நேற்று யாரும் எதிர்பாராத வண்ணம் பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மாநிலத்தின் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை வியாழக்கிழமையன்று (இன்று) கூட்ட பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்றார். சிறப்பு கூட்டத்தொடர் கூட்ட குறிப்பிட்ட விதிகள் இல்லாததால் கவர்னர் உத்தரவை திரும்ப பெற்றதாக கூறப்படுகிறது. கவர்னரின் இந்த நடவடிக்கையால் பஞ்சாப் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.