தங்கம் வென்ற அச்சிந்தா ஷூலிக்கு குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து

 
Droupadi Murmu  - Narendra Modi

காமன்வெல்த் போட்டிகளில் பளுதூக்குதல் பிரிவில் தங்க பதக்கம் வென்ற இந்திய வீரர் அச்சிந்தா ஷூலிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  

22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.  இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.  இதில் ஆண்களுக்கான பளுதுாக்குதல் 73 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் அசின்டா சியுலி பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் அதிகபட்சமாக 143 கிலோ துாக்கிய அசின்டா, 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் அதிகபட்சமாக 170 கிலோ துாக்கினார். ஒட்டுமொத்தமாக 313 கிலோ பளுதுாக்கிய இவர், காமன்வெல்த் விளையாட்டில் புதிய சாதனையுடன் தங்கம் வென்றார்.இது காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வெல்லும் 3வது தங்கம் ஆகும். கடந்த 3 நாட்களாக நடைபெற்ற போட்டியில் இந்தியா பளுதூக்கும் போட்டியில் மட்டும் 6 பதங்கங்களை வென்றுள்ளது. 

achindha

இந்நிலையில், தங்க பதக்கம் வென்ற இந்திய வீரர் அச்சிந்தா ஷூலிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று மூவர்ணக் கொடியை உயரப் பறக்க வைத்தார், ஒரே முயற்சியில் முதலிடத்தை பிடித்த நீங்கள் தான் வரலாறு படைத்த சாம்பியன்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், காமன்வெல்த் விளையாட்டுகளில் திறமை மிகுந்தக அச்சிந்தா தங்கப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, அமைதியான இயல்பு மற்றும் மனஉறுதிக்கு அவர் பெயர் பெற்றவர். தனது சிறப்பு சாதனைக்காக அவர் மிகவும் கடுமையாக உழைத்தார், அவரது எதிர்கால முயற்சிகளுக்காக எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.