டெல்லியில் தலைவர்கள் சந்திப்பதன் மூலம் ஒருவரின் அந்தஸ்து தேசிய அளவில் உயராது.. நிதிஷை கிண்டலடித்த பிரசாந்த் கிஷோர்

 
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

டெல்லியில் மக்களை (அரசியல் தலைவர்கள்) சந்திப்பதன் மூலம் ஒருவரின் அந்தஸ்து தேசிய அளவில் உயராது என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை பிரசாந்த் கிஷோர் கிண்டலடித்தார்.

பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், 2024 தேர்தலில் மத்திய பா.ஜ.க. அரசாங்கத்தை வெளியேற்றும் நோக்கில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த சில தினங்களாக டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், சீதாராம் யெச்சூரி போன்ற பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில், நிதிஷ் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 2005 முதல் மாநிலத்தில் என்ன செய்யப்பட்டுள்ளது என்பதற்கான ஏபிசி  அவருக்கு தெரியுமா?. 

பிரசாந்த் கிஷோர்

இவர்களுக்கு விளம்பரம் எடுக்கவும்,அறிக்கை விடவும் தெரியும். அவர்கள் இதில் வல்லுனர்கள்,இதையெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இப்படி யாராவது  பேசினால்,  புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், அவர் மனதில் ஏதோ இருக்க வேண்டும். அது பா.ஜ.க.வுடன் இருந்து கொண்டு, பா.ஜ.க.வுக்கு மறைமுகமாக உதவுவதற்காக இருக்கலாம் என்று பிரசாந்த் கிஷோரை தாக்கி பேசியிருந்தார்.  நிதிஷ் குமாரின் கருத்துக்கு பிரசாந்த் கிஷோர் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: டெல்லியில் மக்களை (அரசியல் தலைவர்கள்) சந்திப்பதன் மூலம் ஒருவரின் அந்தஸ்து தேசிய அளவில் உயராது. 

4 மாதத்தில் வேலையிழந்த 2 கோடி பேர்… வேலையின்மை உண்மையை மறைக்க முடியாது… ராகுல் காந்தி ஆவேசம்

17 ஆண்டுகள் முதல்வராக இருந்த அவர், தற்போது 10 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதை அவர் (நிதிஷ் குமார்) உணர்ந்துள்ளார். இன்று அவரால் வேலை வழங்க முடிந்தால், அவர் அதை ஏன் முன்பு செய்யவில்லை, அவர் எதற்காக காத்திருந்தார்?. அவர் ஒரு பெரிய தலைவர். அவருககு ஏ முதல் இசட் வரை அனைத்தும் தெரியும், மற்றவர்களுக்கு ஏபிசி தெரியாது. இளைஞர்களுக்கு 10 லட்சம் வேலைகள் கொடுப்பதாக அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு நான் அவருக்கு சவால் விடுகிறேன். 12 மாதங்கள் செல்லட்டும், பிறகு ஏபிசி யாருக்கும், எக்ஸ்ஒய்இசட் யாருக்கு தெரியும் என்று கேட்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.