கர்நாடகாவில் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிப்பு.. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 2 பேர் உயிரிழப்பு...

கர்நாடகாவில் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிப்பு..  தீவிர சிகிச்சை பிரிவில்  இருந்த 2 பேர் உயிரிழப்பு...

கர்நாடக மாநிலம் பெல்லாரி அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த இருவர் உயிரிழந்தனர்.   பாஜக அரசு இருவரையும்  கொலை செய்து விட்டதாக சட்டப்பேரவையில் காங்கிரஸ் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.

கர்நாடகாவில் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிப்பு..  தீவிர சிகிச்சை பிரிவில்  இருந்த 2 பேர் உயிரிழப்பு...

பெல்லாரி நகரில் உள்ள விம்ஸ் அரசு மருத்துவமனையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  இதனையடுத்து மருத்துவமனையில் இருந்த ஜெனரேட்டரும் வேலை செய்யாததால்,   தீவிர சிகிச்சைப் பிரிவில்  இருந்த பல நோயாளிகளின் நிலை கவலைக்கிடமானது.   அவர்களின் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த உல்லா உசேன் என்பவரும்,   பாம்பு தீண்டி சிகிச்சை பெற்று வந்த சிக்கம்மா என்ற பெண்ணும் உயிரிழந்தனர்.  ஆனால்  மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் உயிரிழப்புகள் நேரவில்லை என்றும்,   ஏற்கனவே மிக மோசமான நிலையில்  சிகிச்சை பெற்றுவந்த  அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கர்நாடகாவில் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிப்பு..  தீவிர சிகிச்சை பிரிவில்  இருந்த 2 பேர் உயிரிழப்பு...

இந்தநிலையில் இன்று கர்நாடக சட்டமன்ற  மழைக்கால கூட்டத்தொடரில் மூன்றாவது நாள் நிகழ்வில்,  கேள்வி நேரத்திற்கு பின்னர் பெல்லாரி மருத்துவமனை அதிகாரிகளின் அலட்சியத்தால் 2  பேர் உயிரிழந்ததாகவும்,  அவர்களை பாஜக அரசு  கொலை செய்து விட்டதாகவும்,  எதிர் கட்சி தலைவர்  சித்தராமய்யா  குற்றம் சாட்டினார்.   சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறிய அவர்,  இதுகுறித்து விவாதிக்க நோட்டீஸ் கொண்டு வந்தார்.  இதற்கிடையே  அரசு கொலை செய்துவிட்டது என்பதை ஏற்க முடியாது என்கிற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிடத் தொடங்கினர்.  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரியநிதி அளிக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள் வலியுறுத்த நிலையில், இதுகுறித்து உரிய  விசாரணை நடத்தப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் வாக்குறுதி அளித்தார்.