சாலை மறியலை கைவிட கூறிய காவல்துறைக்கு கல் அடி

 
Police attacked in Gariaband Chhattisgarh vehicles broken during protest

சாலை மறியலை கைவிட கூறிய காவல்துறையை மக்கள் கல்லால் அடித்ததில் 3 காவலர்கள் படுகாயமடைந்தனர்.

Farmers protesting for the demand of paddy purchase center in Gariaband,  many policemen injured. Chhattisgarh Police


சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி 7  கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் துருவகுடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். கரியாபண்ட் தேசிய நெடுஞ்சாலை130' -ல் சுமார் 5 மணி நேரங்களாக சாலை மறியலில் கிராம மக்கள் ஈடுபட்ட நிலையில், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியது மக்கள் ஏற்கததால் தோல்வியடைந்தது. 

போலீசார் பலமுறை எச்சரித்து பிறகும் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு சாலையை மறியலில் ஈடுபட்டவர்களை கலைக்க முற்பட்டனர். அப்போது போலீசாரை சுற்றி வளைத்து கிராம மக்கள் கற்களால் தாக்கியதில் 3 காவலர்கள் காயமடைந்தனர். அதோடு காவல் துறையின் வாகனங்களையும் சூறையாடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவு வருகிறது.