பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 3 ரூபாயும் குறைப்பு

 
petrol

மகாராஷ்டிராவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார். அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 3 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் கூட்டணி அரசு நடைபெற்று வந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என சிவசேனா கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியதை அடுத்து அங்கு ஆட்சி கலைந்தது. இதனையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்களின் தலைவர் ஏக்னாத் ஷிண்டே பாஜகவுடன் சேர்ந்து அம்மாநிலத்தில் புதிய அரசை அமைத்தார். ஏக்னாதி ஷிண்டே முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், பாஜகவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதேபோல் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்னாத் ஷிண்டே வெற்றி பெற்றதை அடுத்து அவர் அதிகாரப்பூர்வமான அரசாங்கத்தை நடத்தி வருகிறார். 

இந்நிலையில், மகாராஷ்டிராவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார். அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 3 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது.