சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக இந்தியா பெரிய கனவுகளை காணவும், அவற்றை நிறைவேற்றவும் துணிகிறது... பிரதமர் மோடி

 
பிரதமர் மோடி

சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக இந்தியா பெரிய கனவுகளை காணவும், அவற்றை நிறைவேற்றவும் துணிகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிரதமர் மோடி நேற்று 2 மெட்ரோ ரயில் பாதைகளை தொடங்கி வைத்தார்.  மேலும் பல வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது: சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக இந்தியா பெரிய கனவுகளை காணவும், அவற்றை நிறைவேற்றவும் துணிகிறது. கடந்த நூற்றாண்டில் நீண்ட காலம் வறுமையை பற்றி விவாதித்து, உலகின் உதவியை நாடி,  எப்படியோ வாழ்கிறார்கள். 

சென்னை மெட்ரோ

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவின் தீர்மானங்களை உலகம் நம்புகிறது. முன்பு வரி செலுத்துவோருக்கு எந்த பொறுப்பும் இல்லை. இப்போது, கடந்த 8 ஆண்டுகளில் அந்த அணுகுமுறையை எதிர்காலம் மற்றும் நவீனமாக மாற்றியுள்ளோம். மும்பை மக்களுக்கு சொந்தமான பணம் அவர்களுடையதாக இருக்கும். மும்பையை கொள்ளையடிக்க மக்களை அனுமதிக்க மாட்டோம். 

மத்திய அரசு

இரட்டை என்ஜின் அரசு  இல்லாதபோது, அனைத்து வளர்ச்சி பணிகளும் நிறுத்தப்பட்டு, அதன் பாதிப்பை மக்கள் சுமந்தனர். அடுத்த 25 ஆண்டுகளில், மகாராஷ்டிரா, இந்தியாவின் வளர்ச்சியை உந்தித் தள்ளும். இரட்டை என்ஜின் அரசாங்கத்தின் கவனம் இதுதான். இந்த அரசு ஆட்சியில் இருப்பதால், மாநிலத்தில் மெட்ரோ உள்பட அனைத்து வளர்ச்சிப் பணிகளும் வேகம் பிடித்துள்ளன. சி.எஸ்.டி. மறுசீரமைப்பு மூலம் ஒவ்வொரு சாதாரண மனிதனும் தொலைத்தூரப் பயணம் செய்வதில் பயனடைவதே நோக்கமாகும். அவர்கள் தடையற்ற இணைப்பை பெறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.