உடல் எடையை குறையுங்க.. தேஜஸ்வி யாதவுக்கு அட்வைஸ் செய்த பிரதமர் மோடி

 
தேஜஸ்வி யாதவ்

பீகார் சட்டப்பேரவையின் எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவிடம் உடல் எடையை குறைக்கும்படி பிரதமர் மோடி அட்வைஸ் செய்தது தற்போது வைரலாகி வருகிறது.
பீகார் சட்டப்பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பீகார் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி

அந்த நிகழ்ச்சியின் போது, தேஜஸ்வி யாதவுடன் பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரம் பேசினார். அப்போது, தேஜஸ்வி யாதவிடம் அவரது தந்தை லாலு பிரசாத் யாதவின் உடல் நலம் குறித்து பிரதமர் மோடி விசாரித்தார். பின்பு உடல் எடையை குறையுங்க என்று தேஜஸ்வி யாதவுக்கு பிரதமர் மோடி அட்வைஸ் செய்தார். தேஜஸ்வி யாதவை உடல் எடையை குறைக்கும்படி பிரதமர் மோடி அட்வைஸ் செய்தது தற்போது வைரலாகி வருகிறது. 

தேஜஸ்வி யாதவ்-ரச்சேல் திருமண புகைப்படம்

தேஜஸ்வி யாதவுக்கு கடந்த ஆண்டு இறுதியில்தான் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தேஜஸ்வி யாதவ் தனது பள்ளி தோழியான ரச்சேல்லை திருமணம் செய்துள்ளார். தேஜஸ்வி யாதவை திருமணம் செய்த பிறகு ரச்சேல் தனது பெயரை ராஜேஸ்வரி யாதவ் என மாற்றிக் கொண்டார். பீகாரின் முன்னாள் முதல்வரும், தேஜஸ்வி யாதவின் தந்தையுமான லாலு பிரசாத் யாதவுக்கு உடல் நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.