சாலையில் கவிழ்ந்த சமையல் எண்ணெய் ஏற்றி சென்ற டேங்கர் லாரி- குடத்துடன் வந்த மக்கள்

 
Oil tanker overturns in Palanadu district

ஆந்திராவில் சமையல் எண்ணெய் ஏற்றி சென்ற டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Oil tanker overturns  in Palanadu district, locals flock to loot


ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம், நகரிகல்லு மண்டலம், சல்லகுண்டலா கிராமம் அருகே சமையல் எண்ணெய் லோடு ஏற்றி சென்ற டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது.  டேங்கர் லாரி கீழே விழுந்ததால், அதில் இருந்த எண்ணெய் அனைத்தும் ஒரு பள்ளத்தில் தேங்கியது.  இதனை அறிந்த பொது மக்கள்  திரண்டு வீடுகளில் இருந்து கேன்கள் மற்றும் குடங்களை கொண்டு வந்து பிடித்து சென்றனர். அதிகளவில் மக்கள் வந்ததால், போலீசாரும் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார் விபத்துக்குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். அதிவேகத்தில் சென்றதே லாரி விபத்துக்குள்ளானதற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.