மேல்நோக்கி பறக்கும் அருவி! ஆச்சர்யபடவைக்கும் வீடியோ

 
waterfalls

மேல்நோக்கி காற்றில் பறக்கும் அருவி மகாராஷ்டிராவில் உள்ளது. இதுதொடர்பான ரம்மியமான வீடியோவை ஐஎப்எஸ் சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா ஆகிய மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. வெள்ள நீரில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் குழுவினர், மாநில பேரிடர் மீட்புப் குழுவினர் மாவட்ட நிர்வாகத்தினர் உடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக காட்சிரோலி, ஹிங்கோலி, நாண்டெட், மாரத்வாடா வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் சுமார் 130 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனையடுத்து அங்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

null


இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள அருவி ஒன்று, அருவி நீர் தலைகீழாக மேல்நோக்கி பறப்பது காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் கொங்கன் கடற்கரைக்கும் டெக்கான் பீடபூமியில் உள்ள பகுதி நானேகாட். இது மும்பையிலிருந்து கிழக்கே 165 கிலோ மீட்டர் த்ப்லைவில் உள்ளது. இயற்கை எழில்மிகுமிக்க இந்த மலைத்தொடரில் ஜோக் என்ற நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு விழும் நீர் காற்றழுத்த தாழ்வு காரணமாக மேல் நோக்கி காற்றில் பறக்கிறது. இந்த வீடியோவை ஐஎப்எஸ் சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார். அத்துடன், காற்றின் வேகத்தின் அளவு புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்படும்போது இவ்வாறு அருவி கீழ்நோக்கி விழாமல் மேல்நோக்கி பறக்கும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.