பாகிஸ்தான் நடிகர்களை ஒப்பந்தம் செய்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. பாலிவுட் தயாரிப்பாளர்களை எச்சரித்த எம்.என்.எஸ். கட்சி

 
மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா

மும்பையில் மட்டுமின்றி இந்தியாவில் எங்கும்  எந்தவொரு நாடகம் மற்றும் படத்திலும் பாகிஸ்தான் கலைஞர்கள் தென்பட்டால் அது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

மகாராஷ்டிராவில் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் சினிமா பிரிவு பாகிஸ்தான் கலைஞர்களை வேலைக்கு எடுப்பதற்கு (நடிக்க ஒப்பந்தம்) எதிராக பாலிவுட் தயாரிப்பாளர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. மேலும், பாகிஸ்தானில் இருந்து கலைஞர்களை வேலைக்கு அமர்த்த வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மின் கட்டணத்தை குறைக்க நிறுவனங்கள் தயார்… ராஜ் தாக்கரே தகவல்

எம்.என்.எஸ். கட்சியின் சினிமா பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், சில பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாகிஸ்தானிய கலைஞர்களை  மீண்டும் பணியமர்த்தத் தொடங்கியுள்ளனர் என்று கேள்விபடுகிறோம். இந்த குறைந்த மனப்பான்மை அவ்வப்போது எழுகிறது. எனவே மும்பையில் மட்டுமின்றி இந்தியாவில் எங்கும்  எந்தவொரு நாடகம் மற்றும் படத்திலும் பாகிஸ்தான் கலைஞர்கள் தென்பட்டால் அது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தெளிவான குறிப்பை வழங்குகிறோம் என தெரிவித்துள்ளது.

பாலிவுட்

எம்.என்.எஸ். கட்சி எப்போதுமே பாகிஸ்தான் கலைஞர்களுக்கு எதிராக ஆக்ரோஷமான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. பாலிவுட் படங்களில் பாகிஸ்தான் நடிகர்களை நடிக்க வைப்பதை அவ்வப்போது எதிர்க்கிறது. 2021ம் ஆண்டில் ராஜ் தாக்கரே கட்சி, எந்தவொரு பாகிஸ்தான் கலைஞரும் இந்தியாவில் பணிபுரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.