அமைச்சர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் பசவராஜ் பொம்மை

 
tn


கர்நாடக உணவுத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி உடலுக்கு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அஞ்சலி செலுத்தினார்.
tn

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மையின் தலைமையிலான பாஜக அரசில் வனம் மற்றும் உணவுத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் உமேஷ் கட்டி(61).  பாஜகவின் மூத்த தலைவரான இவர் உக்கேரி தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு மக்களால் தேர்வு செய்யப்பட்டவர். பெங்களூரு டாலர்ஸ் காலனி இல்லத்தில் வசித்து வந்த இவருக்கு  நேற்று இரவு 10 மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.  உடனடியாக அவரை பெங்களூருவில் உள்ள எம் எஸ் ராமையா மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அமைச்சர் உமேஷ் கட்டி உயிரிழந்துள்ளார்.  மறைந்த அமைச்சர் உமேஷ் கட்டி 9 முறை தேர்தலில் போட்டியிட்டு 8 முறை சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர். ஒருமுறை 800 ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்த இவர் ஆறு முறை கட்சி மாறியுள்ளார்.

rb

 உமேஷ் கட்டி உடலுக்கு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று இரவு எம்.எஸ்.ராமையா மருத்துவமனையில் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தினார். அத்துடன் அமைச்சர்கள் அசோக் , அஸ்வத் நாராயன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,  எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும்  மருத்துவமனைக்கு சென்று மறைந்த அமைச்சர் ரமேஷ் கட்சியின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி சடங்குகள் இன்று நடத்தப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ள நிலையில் கர்நாடகாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடக உணவுத்துறை அமைச்சர் உமேஷ் கட்டிய உயிரிழந்தது குறித்து அரசியல் கட்சி தலைவர்களும் அவரது தொண்டர்களும் தொடர்ந்து இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.