எந்தவொரு மாணவரையும் முட்டை சாப்பிட கட்டாயப்படுத்த மாட்டோம்... கர்நாடக கல்வி துறை அமைச்சர் விளக்கம்..

 
கொரோனா பீதி: 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முட்டை விலை சரிவு 

எந்தவொரு மாணவரையும் முட்டை சாப்பிட கட்டாயப்படுத்த மாட்டோம் என்று கர்நாடக கல்வி துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

கர்நாடகாவில்  முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில்  அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பிரதமர் போஷன் சக்தி நிர்மான் திட்டத்தின் ஒரு பகுதியாக 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 46 நாட்களுக்கு மதிய உணவு திட்டத்தில் முட்டை, வாழைப்பழம் அல்லது கடலை வழங்கப்படும் என்று கர்நாடக பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அறிவித்துள்ளது.

மதிய உணவு வாங்கும் குழந்தைகள்

பள்ளிகளில் மதிய உணவுடன் முட்டை வழங்கப்படும் என்று கர்நாடக அரசின் அறிவிப்புக்கு பா.ஜ.க.வின் தேஜஸ்வினி அனந்த் குமார் உள்பட சிலர் அதிருப்தி தெரிவித்தனர். தேஜஸ்வினி அனந்த் குமார் இது தொடர்பாக டிவிட்டரில், நமது கர்நாடக அரசு மதிய உணவில் முட்டை கொடுக்க முடிவு செய்தது ஏன்? இவை ஊட்டச்சத்துக்கான ஒரே ஆதாரம்  அல்ல. சைவ உணவு உண்பவர்களான பல மாணவர்களுக்கும் இது விதிவிலக்கு. 

பி.சி.நாகேஷ்

நம் கொள்கைகள் ஒவ்வொரு மாணவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும் என டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.அதேசமயம், அம்மாநில கல்வி துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் இது தொடர்பாக கூறுகையில், எந்தவொரு மாணவரையும் முட்டை சாப்பிட கட்டாயப்படுத்த மாட்டோம். சைவ உணவு சாப்பிடுபவர்கள் கடலை மற்றும் வாழைப்பழத்தை  தேர்வு  செய்யலாம் என விளக்கம் அளித்தார்.