‘’பாண்டவர்கள் இப்படித்தான் முத்தம் கொடுப்பார்களா?’’

 
ra

 பாண்டவர்கள் இப்படித்தான் தங்கைக்கு முத்தம் கொடுப்பார்களா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் உத்தரப்பிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்.   காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது தங்கை பிரியங்கா காந்திக்கு பொது இடத்தில் முத்தம்  கொடுத்ததற்குத் தான் அவர் இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

 ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம்  என்று கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடிவடைய நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்த பயணம் 117 நாட்கள் கடந்து இருக்கிறது.   தனது நடை பயணத்தின் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலத்திலும் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் நடை பயணம் மேற்கொண்டார்.


இடையில், காசியாபாத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தியும் அவரது தங்கையும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.  அப்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் நடந்த அந்த நிகழ்ச்சியின் போது மேடையில் அமர்ந்திருந்த ராகுல் காந்தி தனது அருகே அமர்ந்திருந்த தங்கை பிரியங்கா காந்திக்கு பாசத்துடன் முகத்தை அழுத்தி பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.  இதில் உள்ளம் மகிழ்ந்து போன பிரியங்கா காந்தி மேடையில்  நெகிகழ்ச்சியுடன் இருந்தார்.

 மீண்டும் மீண்டும் ராகுல் காந்தி,  தங்கையின் கன்னத்தில் முத்தம் கொடுக்க வந்த போது,  போதும் என்று சொல்லி சிரித்தார் பிரியங்கா காந்தி.  இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ராகுல்காந்தி அந்த மேடையில் பேசியபோது,   மகாபாரதத்தில் கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்ட மாநிலம் உத்தர பிரதேசம்.   21 ஆம் நூற்றாண்டின் கவுரவர்களை பற்றி நான் உங்களுக்கு சொல்கிறேன்.   அவர்கள் காக்கி நிறத்தில் அரைக்கால் சட்டை அணிந்து கையில் லத்தி ஏந்தி இருப்பார்கள் என்று ஆர். எஸ். எஸ். அமைப்பை ராகுல் காந்தி அப்போது சாடியிருந்தார். 

di

 இந்த நிலையில் உத்தரப்பிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.   ஆர். எஸ். எஸ் அமைப்பினர் கௌரவர்கள் என்றால் ராகுல் காந்தி பாண்டவரா? எந்த பாண்டவராவது தனது தங்கையை ராகுல் காந்தி போன்று பொது இடத்தில் முத்தமிடுவாரா? இது நமது கலாச்சாரம் கிடையாது.  இது போன்ற செயல்களுக்கு இந்திய கலாச்சாரம் அனுமதி கொடுப்பது இல்லை.  இதனால் லேபரேலியிலிருந்து வெளியேறும் கடைசி வெளிநாட்டவராக இருப்பார் சோனியா காந்தி என்று விமர்சித்துள்ளார்.

 தனது தங்கை பிரியங்காவுக்கு ராகுல் காந்தி பாசத்துடன் கொடுத்த முத்தத்தை கூட தவறான பார்வையில் விமர்சித்த பாஜக அமைச்சருக்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றார்கள்.