குஜராத்தில் புதிய தடுப்பணைக்கு மோடியின் தாயார் பெயர்!!

 
tn

குஜராத்தில்  புதிய தடுப்பணைக்கு பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் பெயர் சூட்டப்படுகிறது.

tn

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி கடந்த 28ஆம் தேதி உடல்நல குறைவால் அகமதாபாத் யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 30ஆம் தேதி சிகிச்சை பலனின்றி தனது 100ஆவது வயதில் காலமானார்.  இதையடுத்து அன்றைய தினமே தனது தாயாரின் இறுதி சடங்கில் பங்கேற்ற பிரதமர் மோடி அவரது உடலை தகனம் செய்தார்.

tn

இந்நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் உள்ள நயாரி ஆற்றின் குறுக்கே 400 அடி நீளம், 150 அடி அகலத்தில் உள்ள தடுப்பணைக்கு பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மோடி பெயர் சூட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை கடந்த 4ஆம் தேதி ராஜ்கோட் மேயர்,  எம்எல்ஏ முன்னிலையில் நடைபெற்றது. இந்த ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டும் நிலையில் தடுப்பணையை கிர் கங்கா பரிவார் அறக்கட்டளை கட்டுகிறது.  இந்த புதிய தடுப்பணை 2.5 கோடி லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்கலாம்.