கோதுமை ஏற்றுமதிக்கு தடை - இந்தியாவுக்கு ஜி7 நாடுகள் எதிர்ப்பு!!

 
tn

நாட்டில் கோதுமை விலை உச்சத்தை அடைந்துள்ள நிலையில் கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது . ஏற்றுமதி நிறுத்தி வைப்பதன் மூலம் அத்தியாவசிய உணவு தானியங்களில் ஒன்றான கோதுமை விலையை குறைக்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  ஒரு கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென அத்திட்டத்தை கைவிட்டுள்ளது. 

tn
இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு ஜி7நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  ஜெர்மனியில் ஜி-7 நாடுகளின் விவசாய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.  இந்தியாவின்  முடிவால் உலகெங்கும் உணவுப் பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் , எல்லா நாடுகளும் உள்நாட்டு உணவு பாதுகாப்பு என்ற பெயரில் ஏற்றுமதியை நிறுத்தினால் உலக அளவில் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு அதிகரிக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.  கோதுமை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் திகழ்ந்த ரஷ்யாவும் உக்ரைனும் போர் காரணமாக ஏற்றுமதியை நிறுத்தி விட்டதால்,  பல நாடுகளில் அத்தியாவசிய உணவு தானியமான கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.  ஆனால் இந்த தட்டுப்பாட்டை சீர்செய்ய இந்தியா முன் வந்த நிலையில் உள்நாட்டு சூழலை கருத்தில் கொண்டு ஏற்றுமதியை தற்போது நிறுத்தி வைத்துள்ளது.

tn

முன்னதாக இந்தோனோசியா பாமாயில் ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  இதேபோன்று முடிவை வேறு சில நாடுகளும் எடுத்துள்ளதால் உலகெங்கும் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறப்படுகிறது.