முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

 
tn

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் மறைவையொட்டி பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

முன்னாள் மத்திய அமைச்சரும்,  ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 75.  சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சரத் யாதவ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சரத் யாதவ் மயக்கமடைந்த நிலையில் குருகிராம் போர்டிஸ் நினைவு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார் என்றும் அப்போதிலிருந்தே அவரின் உடலில் நாடித்துடிப்பு இல்லை என்றும் அதனால்  அவரை காப்பாற்ற முடியாமல் போனது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

modi

இந்நிலையில் சரத் யாதவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி சரத் யாதவ்வின் மறைவை கேட்டு துயரூற்றேன்.  அவருடைய நீண்ட பொது வாழ்வில் எம்பி ஆகவும்,  அமைச்சராகவும் தனித்து விளங்கினார்.  அவருடனான உரையாடல்களை எப்போதும் கொண்டாடுவேன்.  அவர் குடும்பத்தினருக்கும் , தொண்டர்களுக்கும் என் இரங்கலை  தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.