பாஜகவில் இன்று இணைகிறார் கேப்டன் அமரிந்தர் சிங்

 
amarinder

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரான கேப்டன்  அமரிந்தர்  சிங் இன்று பாஜகவில் இணைகிறார்.

amarinder

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கு முன் காங்கிரசிலிருந்து விலகி தனி கட்சி துவங்கிய நிலையில் பாஜகவில் இன்று இணைகிறார். உட்கட்சி மோதல் காரணமாக 50 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து வந்த அவர் கடந்த ஆண்டு கட்சியை விட்டு விலகிய அமரிந்தர் சிங்,  பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கினார். இதையடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து  அமரிந்தர் சிங் சந்தித்தார்.இருப்பினும் தேர்தலில் அவரது கட்சி படுதோல்வியை சந்தித்தது .தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர் . 

tn

அந்த வகையில் அமரிந்தர் சிங் இன்று பாஜகவில் இணைகிறார். டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பிற தலைவர்கள் முன்னிலையில் அவர் கட்சியில் இணைவார் என்று தெரிகிறது. அத்துடன் பஞ்சாப் லோ காங்கிரஸ் கட்சியையும் பாஜகவில் ஆகிவர் இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது.