தொடரும் அவலம்! ஆசிரியர் பைக்கை தொட்ட தலித் மாணவர் மீது கொலைவெறி தாக்குதல்

 
d

ஆசிரியருக்காக வைக்கப்பட்ட தண்ணீர் பானையிலிருந்து தலித் மாணவர் தண்ணீர் குடித்து விட்டதால் அவரை அடித்தே கொலை செய்தார் ஆசிரியர்.  ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த  இந்த கொடூர சம்பவத்தை அடுத்து உத்தர பிரதேசத்தில் ஆசிரியரின் பைக்கை தலித் மாணவர் தொட்டு விட்டார் என்பதற்காக அவரை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயன்றிருக்கிறார் ஆசிரியர்.

ஆசிரியருக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் குடித்ததால் பள்ளி ஆசிரியர் அந்த மாணவனை அடித்து கொலை செய்துள்ளார். ராஜஸ்தான் மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.  

da

 ராஜஸ்தான் மாநிலத்தில் ஜலோர் மாவட்டத்தில் இருக்கும் சைலா கிராமத்தில் இயங்கிவரின் அந்த தனியார் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் இருபதாம் தேதி அன்று ஆசிரியருக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் குடித்திருக்கிறார் தலித் மாணவர்.  உடனே அந்த தலித் மாணவரை கொடூரமாக தாக்கி இருக்கிறார் ஆசிரியர். 

இதனால் கண் மற்றும் காதில் படுகாயம் அடைந்த மாணவர் சிகிச்சைக்காக அங்கிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அகமதாபாத் கொண்டு செல்லப்பட்டார்.  தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த மாணவர் உயிரிழந்தார்.   மாணவரின் உயிரிழப்பினை அடுத்து சைலா கிராமத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.   நிலைமை மோசமடைவதை தடுக்க அந்த பகுதியில் இணைய வசதி முடக்கப்பட்டது. 

 சம்பவம் குறித்து அறிந்த ராஜஸ்தான் முதல்வர் இரங்கல் தெரிவித்தார்.  மேலும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்,  இந்த வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக சொன்னார்.  பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு விரைவில் நீதி உறுதி செய்யப்படும் என்றார்.   மேலும் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட சிறுவன் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.  சிறுவனை உடன் பிரேத பரிசோதனைக்காக அகமதாபாத்தில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

 குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டு டிஎல் சாதிகள் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கொலை குற்றத்தில் கைது செய்யப்பட்டார்.  

a

 ஆசிரியருக்கு வைத்திருந்த தண்ணீர் பானையில் தண்ணீர் குடித்ததற்காக அடித்து கொடுத்த கொல்லப்பட்ட இந்த மாணவன் சம்பவத்தை அடுத்து உத்தர பிரதேசத்தில் ஆசிரியரின் பைக் தொட்டதற்கு தலித் மாணவன் இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்டிருக்கிறார்.

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரானாபூரில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் கிருஷ்ண மோகன் சர்மா என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரின் பைக்கை தலித் மாணவர் ஒருவர் தொட்டுவிட்டார் என்பதற்காக அந்த மாணவரை அறையில் அடைத்து வைத்து இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கியிருக்கிறார்.  மாணவரின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். சக ஆசிரியர்கள் அந்த மாணவனை  மீட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து அறிந்த போலீசில் நடவடிக்கை எடுத்து அந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

 தலித் மாணவர்களுக்கு தொடர்ந்து நடைபெறும் அவலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.