உடல் முழுவதும் சிகரெட் சூடு! மனைவி மீதுள்ள ஆத்திரத்தை மகன் மீது காட்டிய கொடூரம்

 
சி

சிகரெட்டால் உடல் முழுவதும் சுட்டு மகனை சித்திரவதை செய்த தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

 மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டம் பிவண்டி பகுதியைச் சேர்ந்தவர் பகீம் அகமது கான்.    33 வயதான இவரின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பாக தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

ழ்ழ்ழ்

 5 வயது மகன்,  தந்தை பகீன் அகமது கானின் வளர்ப்பில் இருந்து வந்த உள்ளார்.   மகனை பார்ப்பதற்காக அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்று இருக்கிறார் தாய் .  தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவி  தன் குழந்தையை வந்து அடிக்கடி பார்த்து விட்டு செல்வதால் ஆத்திரத்தில்  இருந்திக்கிறார்.

 அந்த ஆத்திரத்தை தனது மகனின் மீது காட்டி இருக்கிறார்.   இனிமேல் தாயை பார்ப்பியா? பார்த்து பேசுவியா? என்று மிரட்டி சிகரெட்டால் சூடு வைத்திருக்கிறார்.  இப்படி  அடிக்கடி உடல் முழுவதும்  மகனுக்கு சிகரெட் சூடு வைத்திருக்கிறார்.   இதை அறிந்த அந்த சிறுவனின் தாய் பதறிப் பிடித்து சாந்தி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் அளித்திருக்கிறார். 

 அந்த பெண் அளித்த புகார் என்பது போலீசார் வழக்கு பதிவு செய்து பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.

பெற்ற தந்தையே மனைவி மீதுள்ள ஆத்திரத்தை மகன் மீது காட்டிய கொடூரம் பிவண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.