என் துறையில் திருட்டு செயல்கள் செய்யாத ஒரு பிரிவு கூட இல்லை... பீகார் அமைச்சர் பேச்சால் பரபரப்பு

 
சுதாகர் சிங்

பீகாரில், என் துறையில் திருட்டு செயல்கள் செய்யாத ஒரு பிரிவு கூட இல்லை என்று அம்மாநில வேளாண் துறை அமைச்சர் சுதாகர் சிங் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் மெகா கூட்டணி அரசாங்கம் நடைபெற்று வருகிறது. பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் அம்மாநில வேளாண் துறை அமைச்சர் சுதாகர் சிங் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் அமைச்சர் சுதாகர் சிங் கூறியதாவது: எங்கள் (வேளாண்மை) துறையில் திருட்டு செயல்கள் செய்யாத ஒரு பிரிவு கூட இல்லை. நான் துறையின் பொறுப்பாளராக இருப்பதால் நான் அவர்களின் தலைவர் ஆகிறேன். எனக்கும் மேலே இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். 

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

அரசாங்கம் மாறினாலும்,   வேலை செய்யும் முறை அப்படியே இருக்கிறது, எல்லாம் முன்பு போலவே உள்ளது. தரமான நெல் பயிரிட வேண்டிய விவசாயிகள் பீகார் மாநில விதைக் கழகத்தின் நெல் விதைகளை எடுக்கவில்லை. தப்பி தவறி எடுத்தாலும் அதனை தங்கள் வயல்களில் போடுவதில்லை. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக, 100-150 கோடி ரூபாயை விதை நிறுவனங்கள் திருடுகின்றன. 

விவசாயிகள்

இந்த அரசாங்கம் பழையது, அதன் வேலை பாணியும் பழையது. அரசை எச்சரிக்கை  வேண்டியது சாமானியர்களின் கடமை. நீங்கள் உருவபொம்மையை எரித்தால், ஏதோ தவறு நடக்கிறது என்பதை உணர்வேன். ஆனால் நீங்கள் அதை செய்யாவிட்டால், எல்லாம் சரியாகி விடும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சரே தனது துறையில் திருட்டு செயல்கள் நடப்பதாக வெளிப்படையாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.