நாய் ஒரு விசுவாசமான விலங்கு.. சித்தராமையாவுக்கு பதிலடி கொடுத்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

 
மேகதாது அணை- தமிழகத்தில் மேல்முறையீட்டை சந்திக்க தயார்: பசவராஜ் பொம்மாய்

பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னால் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நாய்க்குட்டி போல் நடுங்குகிறார் என்று கூறிய சித்தராமையாவுக்கு, நாய் ஒரு விசுவாசமான விலங்கு என்று முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா சில தினங்களுக்கு முன் நடந்த கட்சி கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னால் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நாய்க்குட்டி போல் நடுங்குகிறார் என்று தெரிவித்து இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் சித்தராமையா நாய்க்குட்டி என்று கூறியது செய்தியாளர்கள் கேட்டனர்.

சித்தராமையா

அதற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில் கூறியதாவது: இது அவரது (சித்தராமையா) ஆளுமையை காட்டுகிறது. நான் அதை எதிர்க்கப் போவதில்லை. நாய் ஒரு விசுவாசமான விலங்கு, நான் கர்நாடக மக்களுக்கு உண்மையாக சேவை செய்து வருகிறேன். அதனால் அவர்கள் என்னை நாய் என்று அழைத்தாலும், அதில் இருந்து நேர்மறையானதை எடுத்துக்கொண்டு மக்களுக்காக பாடுபடுவேன். அவர்கள் செய்ததுபோல் நான் சமூகத்தை பிளவுபடுத்தி மக்களிடம் பொய் சொல்ல மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மல்லிகார்ஜூன் கார்கே

பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எஸ்.பிரகாஷ் கூறுகையில், முதல்வர் குறித்து சித்தராமையா கூறியதது  மிகவும் துரதிர்ஷ்டவசமான மற்றும் வருந்தத்தக்கது. சித்தராமையாவும் அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தார். காங்கிரஸ் கட்சியினர் இன்றைய காலத்தில் பா.ஜ.க. தலைவர்களுக்கு எதிராக மிகவும் கீழ்த்தரமான கருத்துக்களை பயன்படுத்துகின்றனர். முன்னதாக மல்லிகார்ஜூன் கார்கே இதே போன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டார். அவர் (சித்தராமையா) எங்கள் (கர்நாடக) முதல்வராக இருந்தது மிகவும் வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தார்.