மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனின் கல்லறை அழகுப்படுத்தப்பட்ட விவகாரம்.. உத்தவ் தாக்கரேவை சாடிய பா.ஜ.க.

 
வீர் சாவர்க்கர் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் உருவாகி இருக்காது- உத்தவ் தாக்கரே பேச்சு

மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனின் கல்லறை அழகுப்படுத்தப்பட்ட விவகாரத்தில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

1993 மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமனின் கல்லறை மார்பிள் கல் மற்றும் எல்.இ.டி. விளக்குகள் மூலம் புனரமைக்கப்பட்டு, அழகுப்படுத்தியிருப்பதாக  தகவல் வெளியானது. அந்த கல்லறையில் எல்.இ.டி. விளக்குகள் கடந்த மார்ச் 18ம் தேதி நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் மகா விகாஸ் அகாடி அரசாங்கம்  ஆட்சியில் இருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

யாகூப் மேமனன்

இதனையடுத்து, யாகூப் மேமனின் கல்லறை அழகுப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என்றும், விரைவில் விசாரணை தொடங்கப்படும் என்றும் அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். நேற்று அதிகாலையில் யாகூப் மேமனின் கல்லறையை சுற்றி இருந்த அலங்கார எல்.இ.டி. விளக்குகளை போலீசார் அகற்றினர். வக்ப் வாரியம், பி.எம்.சி. மற்றும் அறக்கட்டளை ஆணையரிடம் போலீசார்  இது தொடர்பாக தகவல்களை கேட்பார்கள் என தகவல்.

யாகூப் மேமனின் கல்லறை

மகாராஷ்டிராவில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் மகா விகாஸ் அகாடி அரசு ஆட்சியில் இருந்தபோது யாகூப் மேமனின் கல்லறை அழகுப்படுத்தப்பட்டது என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராம் கதம் டிவிட்டரில், தீவிரவாதி யாகூப் மேமனின் கல்லறையை மஜாராக மாற்றிய அக்கிரமம் உத்தவ் தாக்கரேவின் கண் முன்னே நடந்தது. மும்பை மீதான தாக்கரேவின் காதலா இது?. ஆயிரக்கணக்கான மக்களை கொன்ற பயங்கரவாதி யாகூப். பென்குயின் ராணுவத்துக்கு ஏன் இவ்வளவு பிடிக்கும்? என பதிவு செய்து இருந்தார்.