6 மாநில இடைத்தேர்தல் - பாஜக பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை

 
bjp

6 மாநிலங்களில் நடந்து முடிந்த 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 

பீகார் மாநிலத்தில் உள்ள கோபால் கஞ்ச், மொகாமா, மராட்டியத்தில் இருக்கும் அந்தேரி கிழக்கு, அரியானாவில் ஆதம்பூர், தெலுங்கானாவில் முனுகோடு, ஒடிசாவில் தாம்நகர், உத்தரபிரதேசத்தில் கோலா கோகர்நாத் ஆகிய 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3ம் தேதி நடந்தது. அதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியளவில் எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 7 தொகுதிகளில் பாஜக 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

bjp

அரியானா மாநிலம் ஆதம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பாவ்யா பிஷ்னோய் முன்னிலையில் உள்ளார். 13 சுற்றுகள் முடிவில் பாஜக 10,913 ஓட்டுகள் கூடுதல் பெற்று முன்னிலையில் இருந்தது. காங்கிரசிடம் இருந்து அந்த தொகுதியை பாஜக கைப்பற்றுகிறது. உத்தரபிரதேசம் மாநிலம் கோலா கோகர்நாகத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன் கிரி 28 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். ஒடிசா மாநிலத்தில் உள்ள தாம்நகர் தொகுதியில்   பாஜக முன்னிலையில் இருக்கிறது.  பீகார் மாநிலத்தில் உள்ள மற்றொரு தொகுதியான கோபால் கஞ்சில் கடும் போட்டி நிலவுகிறது. தொடக்கத்தில் ராஷ்டீரிய ஜனதா தளம் வேட்பாளர் மோகன் குப்தா முன்னிலையில் இருந்தார். பின்னர் பாஜக வேட்பாளர் சூசும் தேவி முன்னிலை பெற்றார். தேஜஸ்வி யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ். ஆகியவை தலா 1 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.