ஷாரூக்கானின் பதான் படத்தின் தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் இந்துக்களை அவமதித்து விட்டனர்.. பா.ஜ.க. எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

 
ஹரி பூஷன் தாக்கூர் பச்சால்

ஷாரூக்கானின் பதான் படத்தின் தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் இந்துக்களை அவமதித்து விட்டனர் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஹரி பூஷன் தாக்கூர் பச்சால் குற்றம் சாட்டினார்.

திரைப்படங்கள் குறித்து தேவையற்ற அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று பா.ஜ.க. தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார். இந்நிலையில் பீகாரை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர், ஷாரூக்கான் நடிப்பில் நேற்று வெளியான பதான் படத்தின் தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் இந்துக்களை இழிவுப்படுத்தியதாக குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாரூக்கான்

பீகார் மாநிலம் பிஸ்ஃபி சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பா.ஜ.க.வின் ஹரி பூஷன் தாக்கூர் பச்சால். இவர் பெரும் சர்ச்சைக்கு மத்தியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான், தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள பதான் திரைப்படம் குறித்த கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஷாரூக்கான் ஒரு பி.எஃப்.ஐ. ஏஜெண்ட் என்றும் படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனே, நாட்டை துண்டாட நினைக்கும் கும்பலின் உறுப்பினர் என்றும் ஹரி பூஷன் தாக்கூர் பச்சால் குற்றம் சாட்டினார். மேலும், பதான் படத்தின் தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் இந்துக்களை இழிவுபடுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பதான்

திரையரங்குளில் ஒடிக்கொண்டிருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்த பதான் திரைப்படத்தில் இருந்து இருந்து பேஷாரம் ரங் என்ற பாடல் அண்மையில் வெளியானது. அந்த பாடலில் படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனை காவி நிற பிகினி அணிந்து மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல அமைப்புகளின் தலைவர் இந்த படத்தை தடை செய்ய  வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.