ஆதார் அட்டை இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பு- இரட்டை குழந்தைகள், கர்ப்பிணி பலி

 
Woman, newborn twins die after hospital refuses admission in Karnataka

கர்நாடக மாநிலம், தும்குரு மாவட்டத்தில் ஆதார் அட்டை மற்றும் மாநில அரசின் தாய் அட்டை  இல்லாததால் தமிழ்நாட்டை சேர்ந்த கஸ்தூரி என்ற கர்ப்பிணிக்கு அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே பிரசவமானதில் கஸ்தூரி என்ற இளம் பெண்ணும், அவருக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளும்  உயிரிழந்தன.

Annamalai, party cadre picked up for protesting without permission - The  Hindu


இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தாய் அட்டை மற்றும் ஆதார் அட்டை இல்லாத காரணத்தினால் கர்நாடக மாநிலம் தும்மாகூரு அரசு மருத்துவமனையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணான சகோதரி கஸ்தூரி மற்றும் அவருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் மன வேதனையும் அளிக்கிறது. 


இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட அனைவரையும் கர்நாடக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. மூன்று உயிர்கள் பலியாவதற்குக் காரணமானவர்களை பணியிடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது. தமிழகத்தைச் சேர்ந்த சகோதரி கஸ்தூரி மற்றும் பிறந்த இரட்டை குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்து, தகுந்த தண்டனை வழங்கிட கர்நாடக அரசு வழிவகை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.