புதுமருமகனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய மாமியார்

 
Andhra Pradesh Family Treats Son-In-Law With 379 Different Types Of Food

ஆந்திராவில் புது மருமகனுக்கு நூற்றுக்கணக்கான உணவுகளை தயாரித்து பரிமாறிய பெண் வீட்டாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

379 food items: Feast of love for king-in-law | Times of India

ஆந்திராவில் கோதாவரி மாவட்ட மக்கள் விருந்தினருக்கு மரியாதை செலுத்துவதில் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள். ஆந்திர மாநிலம்  ஏலூரைச் சேர்ந்த குடும்பம் ஒன்று சங்கராந்தியை முன்னிட்டு தங்கள் வீட்டின் புது மாப்பிள்ளைக்கு 379 உணவு வகைகளுடன் விருந்தினை வைத்துள்ளனர். புத்த முரளிதர், கொருபள்ளி குசுமா இருவருக்கும் கடந்த ஏப்ரல் 16ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இந்த சங்கராந்தியை முன்னிட்டு கொருபள்ளி குசுமாவின் பெற்றோர் புதுமாப்பிள்ளையான புத்த முரளிதருக்கு 379 வகையான உணவுகளுடன் பிரமாண்ட உணவு விருந்தினை வைத்து அசத்தியுள்ளனர். 

இதேபோல் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த காசிவிஸ்வநாத் - லட்சுமி தம்பதியினர் தங்களது மகள் அகில் - மருமகன் நராயணாவிற்கு  108  வகையான இனிப்புகளுடன் விருந்து வைத்தனர். இதேபோல் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தடவர்த்தி பத்ரியும், சந்தியாவும் தங்களது மருமகனுக்கு 173 வகையான உணவுகளை தயாரித்து வழங்கினர்.  சங்கராந்தியின் மகளையும் மருமகனையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து விருந்தினர்களாக உபசரித்தனர்.