தனக்கு பிடித்த டிபன் செய்து தராததால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை

 
d

 தனக்கு பிடித்த டிபன் செய்து தராததால் தாயின் மீது கோபப்பட்டுக் கொண்டு 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம். 

 உத்தரகாண்ட் மாநிலத்தில் டெக்ராடூன் என்கிற பகுதியில் வசித்து வந்த அந்த குடும்பத்தில் 16 வயது சிறுமி ஒருவர்,  சம்பவத்தன்று இரவில் தனக்கு பிடித்த டிபனை செய்து தரச் சொல்லி தாயிடம் கேட்டிருக்கிறார்.   ஆனால் சிறுமியின் தாயாரோ அந்த சிறுமி கேட்ட டிபன் செய்து  தராமல் பொதுவாக எல்லாருக்கும் செய்த டிபனை கொடுத்து சாப்பிட சொல்லி இருக்கிறார்.

u

 இதனால் அந்த சிறுமி தாய் கொடுத்த டிபனை சாப்பிடவில்லை.   தாயின் மீது கோபப்பட்ட கொண்டு பேசாமல் இருந்துள்ளார்.   பின்னர் மாடிக்கு சென்று தனது  அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டிருக்கிறார்.   குடும்பத்தினர் வந்த கதவை தட்டிய போது கதவு திறக்கவில்லை .  சரி கோபத்தில் இருக்கிறார். கோபம் தீர்ந்ததும் வந்துவிடுவாள்  என்று என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார்கள்.

 வெகு நேரம் ஆகியும் கதவு திறக்காததால் குடும்பத்தினருக்கு சந்தேகம் வந்திருக்கிறது.   கதவை வேகமாக தட்டியும் திறக்கவில்லை.   இதனால் பதறிய குடும்பத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று இருக்கிறார்கள்.   அப்போது சிறுமி தூக்கில்  தொங்கி இருந்திருக்கிறார்.

 இதை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதிருக்கிறார்கள் .   ஒருவேளை உயிர் இருக்கலாம் என்கிற ஆசையில் சிறுமியை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள் .  மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அச்சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.   தகவல் அறிந்ததும் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து சிறுமியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய உள்ளனர்.  

 வீட்டில் சமைத்த உணவு பிடிக்காமல் இப்படி செய்து விட்டாள் என்று சொல்லி  இருக்கிறார்கள்.    போலீசார் சிறுமியின் குடும்பத்தினரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.